ஃபேன்டஸி படத்தில் யோகி பாபு

ஃபேன்டஸி படத்தில் யோகி பாபு
Updated on
1 min read

மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலா, இயக்கி தயாரிக்கும் ஃபேன்டசி படம், ‘யானை முகத்தான்’. இந்தப் படம் மூலம் அவர் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் யோகிபாபு நாயகனாக நடிக்கிறார். ஊர்வசி, ரமேஷ் திலக், கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் பேரடி, குளப்புள்ளி லீலா , நாகவிஷால் உட்பட பலர் நடிக்கிறார்கள். கார்த்திக் எஸ் நாயர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு பரத் சங்கர் இசை அமைத்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in