ஹீரோவாகிறார் இயக்குநர் விக்ரமன் மகன்

ஹீரோவாகிறார் இயக்குநர் விக்ரமன் மகன்
Updated on
1 min read

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், தனது ஆர்.கே.செல்லுலாயிட்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் படம், ‘ஹிட்லிஸ்ட்’. இதில், இயக்குநர் விக்ரமன் மகன், விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகிறார். சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்குகின்றனர். இந்தப் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது.

இதில் தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, சத்யஜோதி தியாகராஜன், பி.எல்.தேனப்பன் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் எழில், எஸ். ஏ. சந்திரசேகர், மனோபாலா, லிங்குசாமி, வெற்றிமாறன் உட்பட பலர் கலந்துகொண்டு, விஜய் கனிஷ்காவை வாழ்த்தினர்.

படம் பற்றி கே.எஸ்.ரவிகுமார் கூறும்போது, ‘‘கனிஷ்கா பெயருக்கு முன்னால் விஜய் என்று வைத்திருக்கிறார். ஏன் என்று கேட்டேன். அப்பா விக்ரமன், அம்மா ஜெயப்பிரியா. இருவர் பெயரையும் சேர்த்து வைத்துக் கொண்டதாகச் சொன்னார். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும்’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in