Published : 21 Mar 2022 01:13 PM
Last Updated : 21 Mar 2022 01:13 PM
நடிகர்கள் ஆதியும், நிக்கி கல்ராணியும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி ஆதி கூறும்போது, ‘‘லிங்குசாமி இயக்கும் ’வாரியர்’ படத்தில் வில்லனாகவும், ஹன்சிகா, யோகிபாபு, ரோபோ சங்கருடன் ‘பார்ட்னர்’ என்ற நகைச்சுவை படத்திலும் நடிக்கிறேன். என் திருமணம் குடும்பத்தினர் சம்மதத்துடன் கூடிய காதல் திருமணமாக இருக்கும். அதுபற்றி முறையாக அறிவிப்பேன்’’ என்றார்.
நடிகரானார் முன்னாள் டிஜிபி: விமல், தான்யா ஹோப் நடிக்கும் படம் ‘குலசாமி’.இதை ஷரவண ஷக்தி இயக்கியுள்ளார். விஜய்சேதுபதி திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். தமிழக முன்னாள் டிஜிபி ஜாங்கிட் இதில் காவல் துறைஅதிகாரியாக நடித்துள்ளார்.
உக்ரைன் அதிகாரியின் நன்றி! - ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடித்துள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படம் இந்த வாரம்வெளியாகிறது. உக்ரைனில் இதன் படப்பிடிப்புநடந்தபோது ராம் சரணுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் ரஷ்டி. சமீபத்தில் அங்கு போர் தொடங்கியபோது, ராம்சரண் இவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். அப்போது தனது மனைவியின் நோய் பற்றிரஷ்டி கூற, உடனடியாக மருந்து, அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார் ராம்சரண். இதற்காக நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் ரஷ்டி.
‘வாடிவாசல்’ படப்பிடிப்பு - சூர்யா, ‘எதற்கும் துணிந்தவன்’ படத்துக்கு பிறகு, பாலா இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதன் பிறகு, வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு செட்டில் ‘வாடிவாசல்’ படத்தின் சோதனை படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, வெற்றிமாறன், சூர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT