Published : 10 Nov 2021 11:07 am

Updated : 10 Nov 2021 11:11 am

 

Published : 10 Nov 2021 11:07 AM
Last Updated : 10 Nov 2021 11:11 AM

பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் மறைவு 

choreographer-cool-jayanth-passed-away

பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் காலமானார்.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடன இயக்குநராக இருந்தவர் கூல் ஜெயந்த். இவரது இயற்பெயர் ஜெயராஜ்.

1996ஆம் ஆண்டு வெளியான ‘காதல் தேசம்’ திரைப்படத்தில் முதன்முதலாக நடன இயக்குநராக அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற ‘முஸ்தஃபா’, ‘கல்லூரிச் சாலை’ ஆகிய பாடல்களின் நடனம் அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமானவை. முன்னதாக பிரபு தேவா மற்றும் ராஜு சுந்தரம் ஆகியோரது நடனக் குழுவிலும் கூல் ஜெயந்த் இருந்துள்ளார்.

அதன்பிறகு பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்த கூல் ஜெயந்த் மலையாளத்திலும் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் கூல் ஜெயந்த் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை (நவ. 10) சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுகிறது.

தவறவிடாதீர்!

Choreographer Cool JayanthCool Jayanth passed awayகூல் ஜெயந்த் மறைவுநடன இயக்குநர் கூல் ஜெயந்த்காதல் தேசம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x