'எனிமி' வெளியீட்டுத் தேதியில் மாற்றம்

'எனிமி' வெளியீட்டுத் தேதியில் மாற்றம்
Updated on
1 min read

விஷால் - ஆர்யா நடித்துள்ள 'எனிமி' படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் 'எனிமி'. இவர்களுடன் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வினோத் தயாரித்து வருகிறார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படம் அக்டோபர் 14-ம் தேதி ஆயுத பூஜை விடுமுறைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதே தேதியில் சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள 'அரண்மனை 3' படம் வெளியாகவுள்ளது. இதனை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இதனால் 'எனிமி' வெளியீட்டுத் தேதியில் மாற்றம் இருக்கும் எனக் கருதப்பட்டது. தற்போது 'எனிமி' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்துக்குத் தணிக்கை அதிகாரிகள் 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர்.

விரைவில் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு, விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 'எனிமி' படத்தின் பாடல்களை மட்டுமே தமன் உருவாக்கியுள்ளார். படத்தின் பின்னணி இசையை சாம் சி.எஸ் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in