'வலிமை' அப்டேட்: வில்லன் கார்த்திகேயாவின் லுக் வெளியீடு

'வலிமை' அப்டேட்: வில்லன் கார்த்திகேயாவின் லுக் வெளியீடு
Updated on
1 min read

'வலிமை' படத்தில் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயாவின் லுக்கைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் 'வலிமை'. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தெலுங்குப் படங்களில் நாயகனாக நடித்து வரும் கார்த்திகேயா இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ளார்.

'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அஜித்தின் புகைப்படம் மட்டுமே இடம்பெற்றது. வேறு யாருடைய லுக்கையும் படக்குழு வெளியிடாமல் உள்ளது.

இன்று (செப்டம்பர் 21) கார்த்திகேயாவின் பிறந்த நாள். இதனைத் தொடர்ந்து கார்த்திகேயா நடித்து வரும் படத்திலிருந்து பிரத்யேக போஸ்டர்களை வெளியிட்டுப் படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த வரிசையில் 'வலிமை' படக்குழுவிலிருந்து போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கார்த்திகேயாவின் லுக்கையும் வெளியிட்டுள்ளனர்.

'வலிமை' படத்தில் ஹியூமா குரோஷி, யோகி பாபு, புகழ் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் முடிவாகவில்லை. ஆனால், இந்த வாரம் படத்தின் டீஸர் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in