Published : 23 Jun 2021 14:39 pm

Updated : 23 Jun 2021 20:28 pm

 

Published : 23 Jun 2021 02:39 PM
Last Updated : 23 Jun 2021 08:28 PM

விஷாலுடன் இணைந்த 'பாரதி கண்ணம்மா' அகிலன்

agilan-joins-with-vishal-in-vishal-31

ஹைதராபாத்

விஷால் நடித்து வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் 'பாரதி கண்ணம்மா' புகழ் அகிலன்.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறையத் தொடங்கியிருப்பதால், படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 100 பேருக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆந்திராவில் தமிழகத்துக்கு முன்னதாகவே படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதனால், பல்வேறு படங்களின் படப்பிடிப்புகள் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகின்றன. இதில் விஷால் தயாரித்து, நாயகனாக நடித்து வரும் படமும் அடங்கும். இதனை அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கி வருகிறார்.

நாயகியாக டிம்பில் ஹயாத்தி நடித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டு பணிபுரிந்து வருகிறது. இதில் ரவீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர்களுடன் யோகி பாபு மற்றும் 'பாரதி கண்ணம்மா' தொடர் புகழ் அகிலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இதில் அகிலனுக்கு ஜோடியாக தான் ரவீனா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தனது திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் அகிலன். விஷால் படம் மட்டுமன்றி, பிரபுதேவா நடித்துள்ள 'பஹீரா' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அகிலன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


தவறவிடாதீர்!


விஷால்பாரதி கண்ணம்மாஅகிலன்டிம்பில் ஹயாத்திஇயக்குநர் சரவணன்யோகி பாபுரவீனாபாரதி கண்ணம்மா தொடர்One minute newsVishalBharathi kannammaAkilanDimple hayatiDirector thu.pa.saravananYogi babuRaveenaBharathi kannamma serial

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x