தேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப் படமாக 'அசுரன்' தேர்வு

தேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப் படமாக 'அசுரன்' தேர்வு
Updated on
1 min read

67-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக அசுரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இன்று 67-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் இவை. கடந்த வருடம் கரோனா நெருக்கடியால் கிட்டத்தட்ட ஒரு வருடம் தாமதமாக இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. புதுடெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக ’அசுரன்’ தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in