

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவுள்ள படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
'காலா' படத்துக்குப் பிறகு இந்தியில் பெரும் பொருட்செலவில் உருவாகும் 'பர்சி முண்டா' படத்தை இயக்கவிருந்தார் பா.இரஞ்சித். ஆனால், பல்வேறு காரணங்களால் இந்தப் படம் கைவிடப்பட்டதாகத் தெரிகிறது. இந்தப் படத்துக்காக பல்வேறு தகவல்களைச் சேகரித்து முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியிருந்தார் பா.இரஞ்சித்
'பர்சி முண்டா' கைவிடப்பட்டதால், தான் முன்னதாக தயார் செய்து வைத்திருந்த கதையை ஆர்யாவிடம் கூறினார். வடசென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்திய இந்தக் கதையில் நடிக்க ஆர்யா சம்மதம் தெரிவித்தார்.
பாக்ஸராக நடிக்கவுள்ளதால் தன் உடலமைப்பை முழுமையாக மாற்றியமைத்தார் ஆர்யா. இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலாது. படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தாலும், இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.
தற்போது தான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு, பா.இரஞ்சித் இயக்கத்தில் பாக்ஸராக நடிக்கவுள்ளதை உறுதி செய்துள்ளார். இந்தப் படத்தில் கலையரசன், தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
தவறவிடாதீர்