

'கர்ணன்' படம் தொடர்பாகத் தன்னைக் கைது செய்ய வேண்டும் என்று வெளியான அறிக்கைக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் கிண்டலாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கர்ணன்'. மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தாணு தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்தப் படத்துக்கு கருணாஸின் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் மணியாச்சி சாதிக் கலவரத்தை மையப்படுத்தி உருவாகும் 'கர்ணன்' படத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும், அதன் இயக்குநர் மாரி செல்வராஜைக் கைது செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இந்த அறிக்கை நேற்றிரவு (பிப்ரவரி 19) சுமார் 8 மணியளவில் வெளியானது. அடுத்த ஒரு மணிநேரத்தில் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் "’கர்ணன்’ ரிலாக்ஸ் டைம்" என்று பதிவிட்டு, கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தவறவிடாதீர்!