கார்த்திக் சவுத்ரி இயக்கத்தில் விக்ரம் பிரபு
புதுமுக இயக்குநர் கார்த்திக் சவுத்ரி இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விக்ரம் பிரபு.
மணிரத்னம் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடிப்பில், தனா இயக்கத்தில் வெளியான 'வானம் கொட்டட்டும்'. இந்தப் படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. 'வானம் கொட்டட்டும்' படத்தைத் தொடர்ந்து 'அசுரகுரு' அல்லது எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம் பிரபு.
இந்தப் படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்துக்கு மார்ச் மாதத்திலிருந்து தேதிகள் கொடுத்துள்ளார் விக்ரம் பிரபு. சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துக்கொண்டே புதுமுக இயக்குநர் கார்த்திக் சவுத்ரி இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.
இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளது. 'பாயும் ஒளி நீ எனக்கு' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் மணிசர்மாவின் மகன் மஹதி ஸ்வாரா சகர் இசையமைக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக சுரேஷ் பார்கவ், எடிட்டராக கோட்டகிரி வெங்கடேஸ்வரா ராவ் ஆகியோரும் பணிபுரியவுள்ளனர்.
தற்போது இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தவறவிடாதீர்
