'பஹிரா' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

'பஹிரா' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வரும் படத்துக்கு 'பஹிரா' எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவான 'காதலைத் தேடி நித்யா நந்தா' எனும் படத்தை இயக்கி வந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். பைனான்ஸ் பிரச்சினையால் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. இதனைத் தொடர்ந்து பிரபுதேவாவிடம் கதை ஒன்றைக் கூறினார் ஆதிக்.

அந்தக் கதை மிகவும் பிடித்துவிடவே, உடனடியாக பிரபுதேவா தேதிகள் கொடுக்க, படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதில் பிரபுதேவாவுக்கு நாயகியாக அமைரா தஸ்தூர் நடிக்கிறார். இந்தப் படத்தின் 50% படப்பிடிப்பை முடித்துவிட்டுத்தான் சல்மான் கானை இயக்கச் சென்றார் பிரபுதேவா.

தற்போது மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் பிரபுதேவா. இதனால் காதலர் தினத்தை முன்னிட்டு படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. 'பஹிரா' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில் பிரபுதேவாவின் லுக்கிற்குப் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகிறார்கள்.

'பஹிரா' படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது. அதற்குள் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் 'ராதே' படத்தின் பணிகளை முடிக்கவுள்ளார் பிரபுதேவா.

தவறவிடாதீர்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in