சரியாகச் சொன்னீர்கள்: விஜய் சேதுபதிக்கு பி.சி.ஸ்ரீராம் ஆதரவுக் குரல்

சரியாகச் சொன்னீர்கள்: விஜய் சேதுபதிக்கு பி.சி.ஸ்ரீராம் ஆதரவுக் குரல்
Updated on
1 min read

சரியாகச் சொன்னீர்கள் விஜய் சேதுபதி என்று ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் 'பிகில்' படம் விவகாரம் தொடர்பாக நடந்த வருமான வரி சோதனையில் விஜய் வீடும் அடங்கும். அப்போது விசாரணைக்காக 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்புத் தளத்திலிருந்து அவரது வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார் விஜய். இந்தச் சோதனை தொடர்பாகப் பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.

விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இதில் கிறிஸ்தவக் குழுக்கள், விஜய் மூலம் தமிழகத்தில் நுழைய நினைப்பதாகவும், இதற்கான பணப் பரிவர்த்தனையில் விஜய் சிக்கியுள்ளார் என்றும், முதலாவதாகத் திரையுலகில் விஜய் சேதுபதி, ஆர்யா, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்டோர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்தச் செய்தியைத் தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்த விஜய் சேதுபதி, "போயி வேற வேலை இருந்தா பாருங்கடா..." என்று காட்டமாகப் பதிவிட்டார். இந்த ட்வீட் பெரும் வைரலானது. இதற்காகப் பலரும் அவருக்கு ஆதரவுக் குரல் கொடுத்து வருகிறார்கள்.

விஜய் சேதுபதியின் ட்வீட் தொடர்பாகப் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், "விஜய் சேதுபதி நீங்கள் சொன்னீர்கள். நீங்கள் மிகச் சரியாகச் சொன்னீர்கள்" என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தவறவிடாதீர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in