Published : 12 Feb 2020 05:36 PM
Last Updated : 12 Feb 2020 05:36 PM

'மாஸ்டர்' அப்டேட்: மீண்டும் பாடகர் விஜய்

'மாஸ்டர்' படத்தில் 'ஒரு குட்டி கத' என்ற பாடலைப் பாடியுள்ளார் விஜய். இந்தப் பாடல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது.

கோடை விடுமுறையில் வெளியாகவுள்ள படம் 'மாஸ்டர்'. தற்போதைக்கு ஏப்ரல் 9-ம் தேதி வெளியிடலாம் என முடிவு செய்துள்ளனர். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திலிருந்து முதல் பாடலான 'ஒரு குட்டி கத' என்ற பாடல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. இதன் பாடகர் யாராக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். இதற்கான பதிலைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

'ஒரு குட்டி கத' பாடலைப் பாடியுள்ளார் நடிகர் விஜய். சமீபமாகத் தனது நடிப்பில் வெளியாகும் படங்களில் பாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் விஜய். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடல் பிப்ரவரி 14-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கெளரி கிஷன், வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். விரைவில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது.

தவறவிடாதீர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x