நடிகர் சங்கத் தேர்தல் தீர்ப்பு: மேல்முறையீடு செய்ய கருணாஸ் முடிவு

நடிகர் சங்கத் தேர்தல் தீர்ப்பு: மேல்முறையீடு செய்ய கருணாஸ் முடிவு
Updated on
1 min read

விஷாலைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தேர்தல் தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செல்ல கருணாஸும் முடிவு செய்துள்ளார்.

சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், விஷால் தலைமையிலான பாண்டவர் அணி அதிர்ச்சியடைந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து விஷால் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதனிடையே, நடந்து முடிந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணியில் துணைத் தலைவர் பதிவுக்குப் போட்டியிட்ட கருணாஸும் மேல்முறையீடு செய்யவுள்ளார். இது தொடர்பாகப் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கருணாஸ், "தென்னிந்திய நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரையில் பொதுக்குழுவுக்குத் தான் அதிகப்படியான அதிகாரங்கள் இருக்கிறது. அதில் தீர்மானம் நிறைவேற்றித் தான் தேர்தலை நடத்தினோம்.

அதற்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இப்போது அதே நீதிமன்றம் தேர்தல் செல்லாது எனச் சொல்கிறது. பாண்டவர் அணி பக்கம் நியாயம் இருப்பதால் மேல்முறையீடு போகிறோம். விஷால், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோர் மேல் முறையீடு சென்றுவிட்டார்கள். நானும் இன்னும் ஒரு சில தினங்களில் மேல்முறையீடு செல்லவுள்ளேன்.

தமிழக அரசாங்கத்தை ஐசரி கணேஷ் தவறாகப் பயன்படுத்துகிறார் என்பது தான் குற்றச்சாட்டு. சில அமைச்சர்களை தன்னுடன் வைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த தமிழக அரசே தன் பின்னால் இருப்பது போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறார். இது தவறான போக்கு, வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் கருணாஸ்

தவறவிடாதீர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in