

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அயலான்' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காகத் தொடர்ச்சியாக 15 மணி நேரம் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன் - ரவிக்குமார் இணைந்த படத்தின் படப்பிடிப்பு பைனான்ஸ் சிக்கலால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது பைனான்ஸ் பிரச்சினைகள் அனைத்தும் பேசி தீர்க்கப்பட்டு தீவிரமாகப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
'அயலான்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் - இஷா கோபிகர் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இது க்ளைமாக்ஸ் காட்சி என்பதால் படக்குழுவினர் தீவிர உழைப்பைக் காட்டி வருகிறார்கள். எப்படி என்றால் சுமார் 15 நேரம் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு செய்துள்ளனர். சிவகார்த்திகேயன் - அன்பறிவ் மாஸ்டர் ஆகியோருடன் தொடர்ச்சியாக 15 மணி நேரம் 'அயலான்' படப்பிடிப்பு என்று இயக்குநர் ரவிக்குமார் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஏலியன்ஸ் சம்பந்தப்பட்ட படம் என்பதால், க்ளைமாக்ஸ் காட்சியில் அதிகமான லைட்கள் எல்லாம் வைத்துக் காட்சிப்படுத்தியுள்ளனர். அதிகப்படியான லைட்கள் வைத்து படமாக்கினால் உடம்புக்கு அயர்ச்சியைக் கொடுக்கும் அதைப் பொருட்படுத்தாது சிவகார்த்திகேயன் கலந்து கொண்டதைப் படக்குழுவினர் பாராட்டி வருகிறார்கள்.
பிப்ரவரி 17-ம் தேதி வரும் சிவகார்த்திகேயன் பிறந்த நாளுக்காக 'அயலான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடலாம் என்று படக்குழுவினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்
தவறவிடாதீர்