பட வெளியீட்டுக்கு முன்பே ரீமேக் உரிமை விற்பனை: 'ஓ மை கடவுளே' குழு மகிழ்ச்சி

பட வெளியீட்டுக்கு முன்பே ரீமேக் உரிமை விற்பனை: 'ஓ மை கடவுளே' குழு மகிழ்ச்சி
Updated on
1 min read

படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக தெலுங்கு ரீமேக் உரிமை விற்பனையாகி விட்டதால், 'ஓ மை கடவுளே' படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அஸ்வந் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஓ மை கடவுளே'. ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், படத்தையும் வித்தியாசமான முறையில் போஸ்டர்கள் வடிவமைத்து விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

காதலர் தின வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை இப்போதே பிவிபி சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் உடனடியாக ரீமேக் உரிமையை வாங்கிவிட்டதால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு. விரைவில் இதில் நடிக்கவுள்ளவர்கள் யார் என்பது தெரியவரும்.

தவறவிடாதீர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in