

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தின் நாயகிகளாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் விக்னேஷ் சிவன். இந்தப் படத்தின் நாயகனாக சிவகார்த்திகேயன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிய லைகா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.
ஆனால், படத்தின் பொருட்செலவைக் கணக்கில் கொண்டு இந்தப் படம் கைவிடப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் முன்பே எழுதி வைத்திருந்த 'காத்துவாக்குல இரண்டு காதல்' கதையைக் கையில் எடுத்துள்ளார் விக்னேஷ் சிவன். இது தான் தனது அடுத்த படமாக இருக்கும் என்று முன்பே தனது ட்விட்டர் தகவலில் மாற்றியிருந்தார். அது தற்போது நிஜமாகியுள்ளது.
இந்தக் கதையில் விக்னேஷ் சிவன் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவருமே நாயகிகளாக நடிக்கவுள்ளனர். முழுக்க காதல் கலந்த காமெடி களத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். விரைவில் இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவறவிடாதீர்