Published : 09 Feb 2020 11:49 AM
Last Updated : 09 Feb 2020 11:49 AM

திரை விமர்சனம்: சீறு

மயிலாடுதுறையில் கேபிள் டிவி நடத்தும் ஜீவா, அதில் ஊர் மக்களின் பிரச்சினைகளைப் பேசி அவர்களுக்கு உதவுகிறார். இதனால் தொகுதி எம்எல்ஏ ஆர்என்ஆர் மனோகருக்கும், ஜீவாவுக்கும் மோதல் முளைக்கிறது. ஜீவாவை கொல்ல முடிவெடுக்கும் அவர், சென்னையின் தொழில்முறை ரவுடியான வருணை அமர்த்துகிறார். கொடுக்கப்பட்ட வேலையை முடிக்க மயிலாடுதுறைக்கு வரும் வருண், எதிர்பாராத சூழ்நிலையில், கர்ப் பிணியான ஜீவாவின் தங்கையை மருத்துவமனையில் சேர்த்து அவரது உயிரைக் காப்பாற்றுகிறார். தன்னைக் கொல்ல வந்தவன், தனது தங்கையைக் காப்பாற்றிவிட்டுச் சென்றதை அறிந்து வருணைத் தேடி சென்னைக்குச் செல்கிறார் ஜீவா. ஆனால், கொலைவெறித் தாக்கு தலில் சிக்கி குற்றுயிராகக் கிடக்கும் வருணைக் கண்டு, அவரைக் காப்பாற்றுகிறார். ஒரு உதவிக்கு பதில் உதவி செய்தாகிவிட்டது என்று ஊர் திரும்பாமல், வருணைக் கொல்ல வந்தவர்களின் தடம் தேடிக் கிளம்பும் ஜீவா அவர்களைக் கண்டுபிடித்தாரா, இல்லையா என்பது கதை.

தலைப்பைப் பார்த்தால் முழு நீள ஆக்‌ஷன் கதை என எண்ணத் தோன்றும். ஆனால் ஆக்‌ஷனுக்கு இணையாக சென்டிமென்ட், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து கலவை யான மசாலா படமாக தரவேண்டும் என்ற இயக்குநரின் எண்ணம் ஈடேறியிருக்கிறது. எத்தனை பேரை வேண்டுமானாலும் நாயகன் அடித்துத் துவைத்துத் தொங்கவிடுவார் என்ற மிகை நாயக பிம்பத்துடன் எல்லா ஆக்‌ஷன் காட்சிகளும் சித்தரிக்கப் பட்டுள்ளன. மசாலா படங்களுக்கே உரிய ‘டேக் இட் ஈஸி’ மனசுடன் ஏற்றுக்கொள்பவர்களுக்கு இத்தகைய சித்தரிப்பு பிடிக்கவே செய்யும். அதேநேரம் மிகை நாயக ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பொருத்தமான உடற் கட்டையும், உடல்மொழியையும் ஜீவா சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.

அண்ணன் ஜீவா தங்கை காயத்ரி கிருஷ்ணா இடையிலான சென்டி மென்ட் காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. நட்பின் மேன் மையைப் புகழும் வசனங்கள் சில இடங்களில் மிகையாக இருந்தாலும், இளைஞர்களின் கைதட்டல்களைப் பெறுகின்றன. ஜீவா தன்னைக் கொல்ல வருபவரையே நண்பராக ஏற்றுக் கொள்ளும் சூழலும், அந்த நண்பரின் பிரச்சினையை தன் பிரச்சினையாக ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்வை தேடுவதும் திரைக்கதைக்கு புதுமை யும், சுவாரஸ்யமும் கூட்ட உதவு கின்றன.

வருணின் உயிர் குறிவைக்கப் படுவதற்கு பின்னணிக் காரணமாக இருக்கும் பிரச்சினையால், கிராமங் களைச் சேர்ந்த எளிய பெண்களின் கனவுகள் செல்வாக்கு மிக்கவர்களால் சிதைக்கப்படுவதைக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. அதற்கு அந்தப் பெண்களே பழிவாங்கக் கிளம்புவது ‘அட’ போட வைக்கும் ஐடியா.

கொடூரக் கொலைகளைச் செய்யும் ரவுடிகள் வட சென்னை பகுதியை மொத்த குத்தகைக்கு எடுத்தவர்களாக தொடர்ந்து சித்தரித்து வருவது உறுத்தினாலும், இந்த ரவுடியை கொஞ்சம் கருணையும் இருப்பவராகக் காட்டியிருப்பது அந்த உறுத்தலைக் குறைக்கிறது.

பல படங்களில் பார்த்து சலித்த கதை, ஆக்‌ஷன் படங்களுக்கே உரித்தான சட்டகத் திரைக்கதை ஆகிய வற்றால் ஏற்படும் அயர்ச்சியில் இருந்து இதுபோன்ற ‘மாற்றி யோசி’ விஷயங்கள் நம்மை உட்கார வைக் கின்றன. அதேநேரம், வில்லன், தன் தரப்பில் போடும் திட்டங்களும், காய் நகர்த்தல்களும் சுத்தமாக எடுபடவில்லை. அதேபோல் ஒரு முக் கியமான பிரச்சினையைப் பேசியி ருக்கும் ஃபிளாஷ்பேக் பகுதி, மிகையான காட்சிகளால் உரிய தாக் கத்தை ஏற்படுத்த தவறிவிடுகிறது. இந்த இரு சறுக்கல்களும் இரண் டாம் பாதியை நொண்டியடிக்க வைத்து விடுகின்றன.

ஜீவா வழக்கம்போல குறை வைக்காமல் நடிக்கிறார். சென்னை ரவுடியாக வரும் வருண், கதாபாத்தி ரத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். இவர்களுக்கு அடுத்ததாக ஜீவாவின் தங்கையாக வரும் காயத்ரி கிருஷ்ணா உள்ளத்தைக் கொள்ளையடித்துச் செல்கிறார்.

டி.இமான் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கின்றன. பின்னணி இசை இதுபோன்ற படங்களுக்கான வழக்கமான பாதையில் அலறுகிறது. மயிலாடுதுறையை இயல்பாகவும், அழகாகவும் பதிவு செய்திருக்கிறது பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு.

ஏற்கெனவே சாப்பிட்டுப் பழக் கப்பட்ட பிரியாணியை, சாம்பிராணிப் புகையின் மணத்துக்கிடையில் வாழை இலையில் பறிமாறினால் கிடைக்கும் சென்டிமென்ட் ருசியையும் சேர்த்துத் தருகிறது ‘சீறு’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x