ஆர்யாவின் 'டெடி' படப்பிடிப்பு நிறைவு

ஆர்யாவின் 'டெடி' படப்பிடிப்பு நிறைவு
Updated on
1 min read

சக்தி செளந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த 'டெடி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

'டிக்:டிக்:டிக்' படத்துக்குப் பிறகு ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் படத்தை இயக்கி வருகிறார் சக்தி செளந்தரராஜன். 'டெடி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஆர்யா, சயிஷா, சதீஷ், கருணாகரன், மசூம் ஷங்கர், இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திருமணத்துக்குப் பிறகு ஆர்யா - சயீஷா இருவரும் நாயகன் - நாயகியாக நடித்துள்ள படம் இது என்பது நினைவுகூரத்தக்கது. டி.இமான் இசையமைக்க, யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஐரோப்பாவில் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து, அதனைத் தொடர்ந்து சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட நாட்களாகப் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாகப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை (டிசம்பர் 10) வெளியிடவுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

'டெடி' படத்தை முழுமையாக முடித்துவிட்டு, பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ஆர்யா. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in