Published : 21 Jul 2019 08:55 AM
Last Updated : 21 Jul 2019 08:55 AM

கச்சிதமானவர், கண்ணியமானவர்; கடவுளே அனுப்பிய வாய்ப்பாக கிடைத்தவர் அஜித்- போனி கபூர் நெகிழ்ச்சி

கார்த்திக் கிருஷ்ணா

இந்தியில் முன்னணி தயா ரிப்பாளராக வலம் வருப வர், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். அஜித் நடிக்கும் ‘நேர் கொண்ட பார்வை’ படம் மூல மாக தமிழ் திரையுலகிலும் தயாரிப்பாளராக களமிறங்கு கிறார். அவருடன் ஒரு நேர் காணல்..

அஜித்துடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி?

ஸ்ரீதேவிக்கு ஷாலினியை நன்கு தெரியும். எப்போது சென்னை வந்தா லும் அவரை சந்திப்போம். அதனால் ஏற்கெனவே அஜித்துடன் பரிச்சயம் உண்டு. ஆனால் படம் எடுப்பது பற்றி அப்போது பேசி யது இல்லை. ‘இங்கி லீஷ் விங்கிலீஷ்’ படத் தில் நடிக்க அவர் மும்பை வந்தபோது எங்களுக்குள் நட்பு வலுவானது. எங்கள் வீட்டுக்கும் வந்தார். அப்போது ஸ்ரீதேவி, ‘‘என் கணவர் தமிழில் படம் தயாரிக்க ஆசையாக இருக்கி றார். நீங்கள் நடிப்பீர்களா?’’ என்று அஜித்திடம் கேட்டார். அதுமுதல் அதுபற்றி நிறைய உரையாடி இருக்கி றோம். அவர் சொல்லி சில இயக்குநர் கள்கூட என்னை வந்து பார்த்தார்கள். ஆனால், 2017 வரை எதுவும் நடக்க வில்லை. அப்போதுதான் ‘பிங்க்’ வெளியானது. அதை தமிழில் ரீமேக் செய்யலாமே என்றார் அஜித். என் நீண்டகால ஆசையும் நிறை வேறியது.

தமிழுக்கு ஏற்ப அதில் என்ன மாற்றம் செய்துள்ளீர்கள்?

தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என சில விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் படத்தின் கருவில் எந்த மாற்றமும் இல்லை.

நீங்கள் தமிழில் பல நண்பர் களைக் கொண்டவர். ஆனால், தமிழில் நேரடி படம் எடுக்க ஏன் இவ்வளவு காத்திருப்பு?

பாலிவுட்டில் எனக்கான ஓர் இடத்தை நிலையாகப் பிடிக்க வேண்டும் என்பதில்தான் இதுவரை என் கவனம் இருந்தது. தமிழில் படம் எடுக்கும் எண்ணமும் இருந்தது. சரியான வாய்ப்புக்காக காத்திருந்தோம். கடவுளே அனுப்பிய வாய்ப்பாக அஜித் எங்களுக்கு கிடைத்தார்.

நீங்கள் தயாரித்ததில் பெரும்பாலா னவை ரீமேக் படங்கள். குறைந்தபட்ச முதலீடாவது திரும்பிவிடும் என்ற எண்ணம் காரணமா?

ஒரு படம் ஒரு பகுதியில் ஏற்கெனவே வெற்றி பெற்றிருப்ப தால் நாம் சரியான பாதையில் தான் இருக்கிறோம் என்று ஓரளவு நம்பிக்கையுடன் இருக்கலாம். அதன் ரீமேக் ஹிட் ஆகிறதா, இல்லையா என்பது வேறு சில காரணங் களைப் பொருத்தது. நான் ரீமேக் செய்த சில படங்களே சரியான வரவேற்பை பெறவில்லை. ஆனால் அவை மோசமான தோல்வி அல்ல. சுமாராக வெற்றியடைந்து, தேவை யான வசூல் பெற்றுள்ளன.

படங்களை ரீமேக் செய்யும்போது, அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப மாற்றங்கள் அவசியம்தானா?

கண்டிப்பாக தேவை என்று நினைத்தால் செய்யலாம். தவறு இல்லை. படத்தின் கருவை பாதிக்கா மல் குறிப்பிட்ட அளவு மாற்றலாம். படத்தின் ஆன்மா மாறக்கூடாது. ‘சார்லி சாப்ளின்’ படத்தை உரிய மாற்றங்கள் செய்துதான் இந்தியில் எடுத்தோம். தயாரான ஒரு படத்தை பார்க்கும்போது அதில் சில விஷயங் கள் சேர்க்கலாம் என்ற எண்ணம் வருவது இயல்பே. ‘பிங்க்’ படத்தை பொருத்தவரை, என்ன சேர்க்கலாம், கூடாது என்பதை இயக்குநர் வினோத் தும், அஜித்தும் பேசி முடிவு செய்தனர்.

படங்களில் உங்கள் யோசனைகள் இருக்குமா?

தேவைப்படும்போது சொல் வேன். அதேநேரம், தேவையின்றி திணிக்கமாட்டேன். படத்தின் எல்லா அம்சங்களிலும் பங்குபெற விரும்பு வேன். உதவி படத் தொகுப்பாளராக வாழ்க்கையை ஆரம்பித்தேன், பிறகு உதவி இயக்குநராக இருந்தேன். துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. இந்த அனுபவத்தை பயன்படுத்தாவிட்டால், இந்த பயணத்துக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

வினோத் - அஜித் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் தயாரிக்கிறீர்களே, அது என்னமாதிரி படம்?

முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படம். பைக், கார் சேஸிங் என நிறைய சாகசக் காட்சிகள் இருக்கும். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் பொழுதுபோக்குப் படமாக இருக்கும். இப்போதைக்கு தமிழில் மட்டுமே எடுக்கிறோம். எல்லாம் சரியாக அமைந்தால் இந்தியிலும் வெளியிடும் திட்டம் உள்ளது.

அஜித்துடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. அவருக்கு ஓகே என்றால், தொடர்ந்து அவரை வைத்து படங்கள் தயாரிப்பேன். அவர் சிறந்த திறமைசாலியும்கூட. ‘நேர்கொண்ட பார்வை’ குழுவே மீண்டும் இதில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி.

அஜித்திடம் நீங்கள் பார்த்த தனித்துவம் என்ன?

கச்சிதமான, சிறந்த மனிதர் என்ப தற்கு உதாரணம் அஜித். மரியாதை தெரிந்தவர். கண்ணியமானவர். மிகவும் கனிவானவர். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி யோசிக்காமல் தன் வேலையை மட்டுமே பார்ப்பவர். அதே நேரம் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். எல்லோரிடமும் ஒரே மாதிரி இருப்ப வர். அவரது திறமையைத் தாண்டி, அவரது இந்த குணங்களும்தான் அவர் இவ்வளவு பெரிய நட்சத்திர மாக இருக்கக் காரணம் என்று நினைக்கிறேன்.

ஸ்ரீதேவி பற்றி..

என் வாழ்க்கையின் காதல் அவர் தான். என் உயிரோட்டமாக இருந்த வர். அவர் இல்லாமல் நான் இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது. அவர் இல்லாமல் போனதை ஒவ்வொரு நொடியும் உணர் கிறேன்.

அவரது வாழ்க்கையை திரைப்பட மாக எடுக்கும் எண்ணம் உள்ளதா?

இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x