Last Updated : 12 Mar, 2015 04:26 PM

 

Published : 12 Mar 2015 04:26 PM
Last Updated : 12 Mar 2015 04:26 PM

வீடியோ பகிர்வு: பாடல், காட்சிகளால் வசீகரிக்கும் சிஎஸ்கே

யூடியூபில் அதிகாரபூர்வமாக பகிரப்பட்டுள்ள சிஎஸ்கே எனும் படத்தின் ட்ரெயல்ர், பாடல் காட்சிகளும் வெகுவாக ரசிக்கும் வகையில் புது அனுபவம் தருகிறது. | வீடியோ இணைப்புகள் - கீழே |

எஸ்எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், வைப்ரன்ட் மூவீஸ் வெளியிட உள்ள சிஎஸ்கே (சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா) திரைப்படம் மார்ச் 20-ல் வெளியாகிறது

புதுமுக இயக்குநர் சத்தியமூர்த்தி இயக்கும் இப்படத்தில் ஷரண், நாராயண், விமல் மற்றும் 'ஆரோகணம்' ஜெய் குஹைனி நடித்துள்ளனர்.

சத்தியமூர்த்தி சென்னை ஓவியக் கல்லூரியில் படித்தவர். 'அட்டகத்தி', 'மெட்ராஸ்' ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித்தின் ஜுனியர். இயக்குநர் ராதாமோகனிடம் சினிமா கற்றவர். ஒரு படத்துக்கு டைட்டில் வைப்பது கூட இப்போது சாதாரண விஷயம் இல்லை. எல்லோரையும் கவரும் விதத்தில் டைட்டில் வைத்திருக்கிறார் இயக்குநர் சத்தியமூர்த்தி.

சிஎஸ்கே படத்தின் கதை:

திட்டமிட்டு வாழ்க்கை நடத்த நினைக்கிறோர் ஹீரோயின் ஜெய் குஹைனி. அன்றைய வாழ்க்கையை அன்றைக்கே வாழ்ந்துவிட வேண்டும் என்று துடிக்கிறார் ஹீரோ ஷரண். இவர்கள் இருவருக்கும் காதல் அரும்புகிறது.

சிஎஸ்கே அணியில் சேர்ந்து விளையாடுவதை லட்சியமாகக் கொண்டிருக்கிறான் ஹீரோ ஷரண். விளையாட்டுல கூட விளையாட்டா இருக்கக் கூடாது. அப்போதான் ஜெயிக்க முடியும் என்று நினைப்பவன். அவனை, உருப்படியாக வேலை பார்க்கச் சொல்கிறார் ஹீரோயின். இவர்கள் காதல் நிறைவேறும் தருணத்தில் ஹீரோயின் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.

பிரம்மாண்டமான ஷாப்பிங் மாலில் சிக்கிக் கொள்ளும் ஹீரோயினின் திலில் அனுபவங்கள்தான் படத்தின் கதை. காதலனின் நள்ளிரவு தேடல், காதலியின் பரிதவிப்பு, நண்பனின் நெடுஞ்சாலைப் பயணம் என மூன்று பகுதிகளாக திரைக்கதை விரியும் களம் இது. ரொமான்ஸ் த்ரில்லர் வகையில் மிக முக்கியமான படம் என கருதப்படுகிறது.

குறைந்த வெளிச்சத்தில் படமாக்கக் கூடிய சி-300 வகை கேமராவை இந்தியாவிலேயே முதன் முறையாக பயன்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளார் ஸ்ரீசரவணன். ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பள்ளியில் படித்த சித்தார்த் மோகன் இசையில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

ட்ரெய்லரும், பாடல்களும் நம் மனதை விட்டு அகலாமல் இருக்கின்றன. உந்தன் முகம் காண ஓடி வந்தேன் பாடல் திரும்பத் திரும்பப் பார்க்க வைக்கிறது. ஒளிப்பதிவும், இசையும் பாடலில் லயிக்கச் செய்கிறது.