Last Updated : 21 Nov, 2013 12:00 AM

 

Published : 21 Nov 2013 12:00 AM
Last Updated : 21 Nov 2013 12:00 AM

ரஜினி பிறந்தநாளில் ‘16 வயதினிலே’ ரிலீஸ்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தயாரான 16 வயதினிலே திரைப்படம் ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜாவின் இசையில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடித்த படம் ‘16 வயதினிலே’. இத்திரைப்படம் 36 ஆண்டுகளுக்கு பின் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் திரைக்கு வருகிறது.

இது குறித்து, அம்மன் கிரியேஷன்ஸின் இணை தயாரிப்பாளரும் டிஜிட்டல் ஆக்கத்தின் இயக்கு னருமான மிதுன்குமார் கூறு கையில், “16 வயதினிலே டிஜிட்டல் பதிப்பு தமிழ்நாட்டில் 350 திரையரங்குகளிலும், பெங்களூரில் 55 திரையரங்கு களிலும், மும்பையில் 10 திரையரங்குகளிலும் வெளிநாடு களிலும் திரையிடப்பட உள்ளது. படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x