Published : 24 Sep 2016 02:42 PM
Last Updated : 24 Sep 2016 02:42 PM
விஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த வருடத்தில் வெளியாகும் ஐந்தாவது படம், 'காக்கா முட்டை' இயக்குநர் மணிகண்டனின் மூன்றாம் படம், நிஜ குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங்கின் இரண்டாவது படம் ஆகியவை ஆண்டவன் கட்டளை படத்தில் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தின.
இணையவாசிகளின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யுமாறு 'ஆண்டவன் கட்டளை' அமைந்ததா?- இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..
#ஆண்டவன்_கட்டளை - நேர்த்தி, அழகு, கச்சிதம் #Worthwatching
#ஆண்டவன்_கட்டளை - நகைச்சுவை, எதார்த்தம், கருத்து நிறைந்த அருமையான திரைப்படம். பல குறுக்கு வழிகளில் சென்றும் சரி செய்ய முடியாத தவறை ஒரே ஒரு முறை நேர்மையின் வழியில் சென்றதும் சுலபமாக சரியாகிவிடுகிறது என்பது படத்தின் கரு. விஜய் சேது, ரித்திகா சிங், யோகி பாபு, நாசர், பூஜா தேவாரியா என அனைவரும் அருமையாக நடித்து இருக்கிறார்கள். கே அவர்களின் பின்னணி இசை நன்று. வாழ்த்துக்கள் இயக்குனர் மணிகண்டன் & குழு.
தரகர் மூலம் குறுக்கு வழியில் வெளிநாடு செல்ல துடிக்கும் அனைவரும் காண வேண்டிய படம். இயக்குனருக்கு நன்றி!
சின்ன விதை பெரிய மரத்தை உருவாக்குவது போல, சின்ன பொய் பெரிய பிரச்னையை உருவாக்கிடும்! #ஆண்டவன்கட்டளை - அருமையான வசனம்.
#ஆண்டவன்_கட்டளை - மற்றுமொரு காக்காமுட்டை.
சாமானியனுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் இடையேயான அதீத இடைவெளியையும், துரித சேவைக்காக அவன் மேற்கொள்ளும் தவறான நடவடிக்கையையும் அதற்கான சூழ்நிலையையும் எதார்த்தமாக பதிவு செய்ததில் மனதைக் கவருகிறது இந்த ஆண்டவன் கட்டளை.
கல்யாணம் முதல் காதல் வரைனா அது சீரியல், விவாகரத்து முதல் கல்யாணம் வரைனா அது #ஆண்டவன்_கட்டளை படம்
#ஆண்டவன்_கட்டளை - பாஸ்போர்ட் ஆபீஸ்ல ப்ரோக்கர்களால நடக்கற தில்லுமுல்லுகளை வெளிச்சம் போட்டு காட்டிருக்காங்க. படத்துல நடிச்ச எல்லா நடிகருமே சிறப்பான நடிப்ப வழங்கிருக்காங்க. படத்துல ஒரு இடத்துலகூட விரசமான காட்சியோ ஆபாசமான வசனமோ இல்லாம குடும்பத்தோட பார்க்கிற மாதிரி போர் அடிக்காம படத்த கொடுத்திருக்காரு இயக்குனர் மணிகண்டன்.
சில பேருக்கு நடிக்கவே தெரியாது, பச் நம்மாளு நடிக்கறதே தெரியாது.
சிறுசிறு இடைவெளிகளில் அண்ணன் விஜய்சேதுபதி படங்கள் வெளிவந்தாலும் அத்தனையும் வெற்றிமேல் வெற்றியாகவே தொடர்கிறது. கதை தேர்வில் உனக்கு ஈடில்லை தலைவா.. #ஆண்டவன்_கட்டளை
ஆண்டவன் கட்டளை... துணிந்து செல்லுங்கள். இது நம்மோட படம். ஆனால் கொஞ்சமா இழுக்குறா மாதிரி இருக்கும். சொல்லிய விஷயம் அழகானது.. எனவே மன்னிச்சூ.
இயக்குநர் மணிகண்டன் காக்கா முட்டை, குற்றமே தண்டனை என்று இருவேறு வகையான படங்களை அடுத்து ஆண்டவன் கட்டளையை முற்றிலும் புதிதாகத் தந்து, என்னை நீங்கள் குறிப்பிட்ட இலக்கில் வைத்திருக்கவே முடியாதென்று தெளிவாக்கியது போலவே இருக்கின்றது. இதுவரையிலான மூன்று படங்களில் ஆண்டவன் கட்டளையே அவரின் சிறந்த படைப்பாக இருக்கும் என்ற என்னுடைய நம்பிக்கை, பலருக்கும் இருக்கும் என்றே நினைக்கிறேன்.
மணிகண்டன் - perfect planning & execution
#ஆண்டவன்கட்டளை அட்டகாசம்! எளிமையான காட்சிகள், அருமையான திரைக்கதை. விஜய் சேதுபதி - யோகி பாபு கூட்டணி அமர்க்களம்
>naresh
சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன்கட்டளை. எல்லாப் படத்துலயும் வித்தியாசமான கதாபாத்திரம். சூப்பர்ஜி..!
ஆண்டவன் கட்டளை கண்ட பிறகு நண்பர்களுக்கு அன்பு கட்டளையிட்டேன்- மீண்டும் ரசிக்க.
விஜய்சேதுபதி சிரிச்சிட்டே லவ் ப்ரபோஸ் பண்றதும்... அத ரித்திகா அழுதுட்டே ஏத்துக்குறதும் கியூட் #ஆண்டவன் கட்டளை.
மின்மினியும் பட்டாம்பூச்சியும் யதார்த்தமாய்! "கார்மேகக்குழலி"
நெருடலின்றி குடும்பத்துடன் ரசிக்கலாம், லயிக்கலாம்!
அர்த்தமுள்ள முயற்சிகள் வலிமையானது, ஆண்டவன் கட்டளை ரசிக்க முடிந்தது, சில இடங்களில் லயிக்கவும். மணிகண்டன் சந்திரா மதியழகனுக்கு பாராட்டுக்கள்.
#ஆண்டவன்கட்டளை - விஜய்சேதுபதி வெற்றியில் அழகான வைரக்கல்!
எதையும் நேர்மையாக அணுகுங்கள். குறுக்கு வழிகளோ இடைத்தரகர்களோ வேண்டாம். இதைசொல்லி இந்தகாலத்தில் படம் எடுக்க முடியுமா? முடியும்➡ ஆண்டவன் கட்டளை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT