Published : 23 Jun 2016 12:42 PM
Last Updated : 23 Jun 2016 12:42 PM
'ரெமோ' பர்ஸ்ட் லுக் அனைவருக்கும் புதுவித ஆச்சர்யமாக இருக்கும் என அப்படத்தின் இசையமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் படம் 'ரெமோ'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் ராஜா தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடலை இன்று (ஜூன் 23) இயக்குநர் ஷங்கர் வெளியிட இருக்கிறார். இதுவரை இப்படத்தில் சிவகார்த்திகேயன் எந்த தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்பதை படக்குழு மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறது. மேலும், பெண் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து இசையமைப்பாளர் அனிருத் கூறும்போது, "’ரெமோ’ பர்ஸ்ட் லுக் குறித்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். அனைவருக்குமே அது ஒரு புதுவித ஆச்சர்யமாக இருக்கும். இன்று படத்தின் முதல் பாடலும் வெளியாகிறது.
’ரெமோ’ கதாபாத்திரத்துக்கு ஒரு தீம் மியூசிக் போல பண்ணலாம் என்று தோன்றியது. வழக்கமாக தீம் மியூசிக் என்பது இசை கருவிகளைக் கொண்டுதான் இருக்கும். குரல்களை வைத்து பண்ணலாமே என தோன்றியது. அது நல்லபடியாக அமைந்ததால், அதை ஒரு பாடலாகவே மாற்றினோம். அது தான் ’ரெமோ’ படத்தின் டைட்டில் பாடலாக இருக்கிறது.
’ரெமோ என் காதலன்’ பாடலைக் கேட்டுவிட்டு உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்கள்" என்று அனிருத் தெரிவித்திருக்கிறார்.
அனிருத் பேசியிருக்கும் வீடியோ பதிவைக் காண:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT