அறுந்த ரீலு 22: பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட சந்திரமுகி 2

அறுந்த ரீலு 22: பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட சந்திரமுகி 2
Updated on
1 min read

'சந்திரமுகி' படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து 'சந்திரமுகி 2' படத்துக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது.

பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சந்திரமுகி'. பி.வாசு இயக்கிய கன்னடப் படமான 'அபத்மித்ரா' படத்தின் ரீமேக்காகும். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் வசூலில் பெரும் சாதனை படைத்தது.

இப்படத்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து பி.வாசு மற்றும் ரஜினி இருவருமே அடுத்த பாகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனால், சில காலத்திலேயே ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு சென்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து 'சந்திரமுகி 2' பேச்சுவார்த்தை மெதுவாக குறைந்தது. உடல்நிலை சரியானவுடன் ரஜினியும் வெவ்வேறு படங்கள் நடித்து பிஸியாகிவிட்டார்.

ஆனால், இப்போதும் 'சந்திரமுகி 2'வுக்காக பி.வாசு ஒரு பிரம்மாண்டமான கதையை தயார் செய்து வைத்திருக்கிறார். அப்படம் தான் தனது கனவுப் படமாகவும் இருக்கும் என்று தனது நண்பர்களிடம் தெரிவித்து வருகிறார் பி.வாசு.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in