Last Updated : 16 Mar, 2018 01:32 PM

 

Published : 16 Mar 2018 01:32 PM
Last Updated : 16 Mar 2018 01:32 PM

தனுஷின் ‘மாரி 2’ எப்போது ரிலீஸ்?

 தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘மாரி 2’ படம் எப்போது ரிலீஸாகும் என ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார் பாலாஜி மோகன்.

‘மாரி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘மாரி 2’ படத்தை இயக்கி வருகிறார் பாலாஜி மோகன். தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். மேலும், கிருஷ்ணா, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு தனுஷ் படத்துக்கு இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

‘மாரி 2’ படத்தின் ஷூட்டிங் 40 சதவீதம் முடிவடைந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார் பாலாஜி மோகன். “மாரி 2 படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதில் மகிழ்ச்சி. ஸ்டிரைக் முடிந்தபிறகு ஷூட்டிங் தொடங்கும். இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பாலாஜி மோகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x