Last Updated : 09 Mar, 2018 02:57 PM

 

Published : 09 Mar 2018 02:57 PM
Last Updated : 09 Mar 2018 02:57 PM

மேயாத மான் பிரியா பவானி சங்கர், இந்துஜாவுடன் ஜோடி சேரும் உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தில், பிரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா இருவரும் ஹீரோயின்களாக நடிக்க உள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்து வருகிறார். வாடிப்பட்டியில் நடைபெற்று வந்த ஷூட்டிங், நாளை முதல் கொடைக்கானலில் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். வருகிற 13 ஆம் தேதியுடன் இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைய இருக்கிறது.

அதைத் தொடர்ந்து அட்லீயின் உதவியாளர் ஈனாக் இயக்கும் படத்தில் நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா என இரண்டு பேர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இரண்டு பேருமே ‘மேயாத மான்’ படத்தில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று பூஜையுடன் இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x