Last Updated : 14 Mar, 2018 06:56 PM

 

Published : 14 Mar 2018 06:56 PM
Last Updated : 14 Mar 2018 06:56 PM

உதயநிதியின் ‘கண்ணே கலைமானே’ படப்பிடிப்பு நிறைவு

உதயநிதி ஸ்டாலின் நடித்துவந்த ‘கண்ணே கலைமானே’ படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘கண்ணே கலைமானே’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், உதயநிதி ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். மேலும், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்கள் எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மதுரை, வாடிப்பட்டியை பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. கடந்த 10 ஆம் தேதி கொடைக்கானலில் தொடங்கிய படப்பிடிப்பு, இன்று நிறைவு பெற்றுள்ளது.

இன்றுடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சீனு ராமசாமி. இதைத் தொடர்ந்து அட்லீ உதவியாளர் ஈனாக் இயக்கும் படத்தில் நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x