Last Updated : 14 Mar, 2018 07:18 PM

 

Published : 14 Mar 2018 07:18 PM
Last Updated : 14 Mar 2018 07:18 PM

தினேஷ் நடிக்கும் படத்தைத் தயாரிக்கிறார் பா.ரஞ்சித்

தினேஷ் நடிக்கும் படத்தை , இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கிறார்.

கேரக்டர் ரோல்களில் நடித்துவந்த தினேஷை, தான் இயக்கிய ‘அட்டகத்தி’ படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் பா.ரஞ்சித். அதன்பிறகு பல படங்களில் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார் தினேஷ். இவர் நடிப்பில் வெளியான ‘விசாரணை’ படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்தன.

தினேஷ் நடிப்பில் தற்போது ‘அண்ணனுக்கு ஜே’, ‘களவாணி மாப்பிள்ளை’, ‘பல்லு படாம பாத்துக்க’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், தினேஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தை, பா.ரஞ்சித் தயாரிக்க இருக்கிறார். ஆதியன் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர் நடிப்பில் ஏற்கெனவே ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தைத் தன்னுடைய நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார் பா.ரஞ்சித்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x