

அக்டோபர் 1-ம் தேதி ஓடிடியில் ‘மதராஸி’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘மதராஸி’. இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. உலகளவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. இதனை லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.
தற்போது அக்டோபர் 1-ம் தேதி ‘மதராஸி’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மட்டுமன்றி அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் சிவகார்த்திகேயனின் நடிப்பு பேசப்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸின் சமீபத்திய படங்களில் நல்ல விமர்சனம் கிடைத்தது இப்படத்துக்கு தான்.
வித்யூத் ஜாம்வால், விக்ராந்த், ருக்மணி வசந்த், பிஜு மேனன், ஷபீர் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்திருந்தனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார். ’மதராஸி’ படத்தைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
Brace yourself for a mad ride with yours truly Madharaasi #MadharaasiOnPrime, Oct 1@SriLakshmiMovie @Siva_Kartikeyan @ARMurugadoss @anirudhofficial @VidyutJammwal #BijuMenon @rukminitweets @actorshabeer @vikranth_offl @SudeepElamon pic.twitter.com/McLGlMBEN4