விக்ரம் - பிரேம்குமார் படம் கைவிடல்?

விக்ரம் - பிரேம்குமார் படம் கைவிடல்?
Updated on
1 min read

பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருந்த படம் கைவிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘வீர தீர சூரன்’ படத்துக்குப் பிறகு, பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார் விக்ரம். அதில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில மாதங்களிலேயே அப்படம் கைவிடப்பட்டது. இதனை அருண் விஸ்வா தயாரிக்கவிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘96’, ‘மெய்யழகன்’ இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் விக்ரம். இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படமும் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

முழுக் கதையும் கேட்டவுடன் விக்ரம் பல்வேறு திருத்தங்களைக் கூறியிருக்கிறார். அதில் இயக்குநருக்கு உடன்பாடு இல்லை என்பதால், இந்தக் கூட்டணி பிரிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் விக்ரமின் அடுத்தப் படம் என்ன என்பது இதுவரை முடிவாகவில்லை. விரைவில் தேசிய விருது வென்ற இயக்குநர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பதாக செய்திகள் வரலாம் என்கிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in