தமிழ் சினிமா
கமர்ஷியல் ஃபேன்டஸியாக உருவான ‘ஓ காட் பியூட்டிஃபுல்’!
‘பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மூலம் புகழ்பெற்ற கோபி, சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் படம், ‘ஓ காட் பியூட்டிஃபுல்’. இதில், விடிவி கணேஷ், வின்சு சாம், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி என பலர் நடித்துள்ளனர்.
பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இதை அறிமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கியுள்ளார். சக்திவேல், கே.பி.ஸ்ரீ கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜேசி ஜோ இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகின்றன. இரு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைச் சொல்லும் கமர்ஷியல் ஃபேன்டஸி படமான இதன் கதை, உண்மையே என்றும் நிலையானது, வாய்மையே எப்போதும் வெல்லும் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
