“‘சப்தம்’ படத்தை விளம்பரமின்றி கொன்றனர், ஆனால் ரசிகர்கள்...” - இயக்குநர் அறிவழகன் உருக்கம்

“‘சப்தம்’ படத்தை விளம்பரமின்றி கொன்றனர், ஆனால் ரசிகர்கள்...” - இயக்குநர் அறிவழகன் உருக்கம்
Updated on
1 min read

‘சப்தம்’ படத்துக்கு ரசிகர்களிடம் கிடைத்த அன்பு குறித்து அறிவழகன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பிப்.28-ம் தேதி திட்டமிட்டப்படி ‘சப்தம்’ வெளியாகவில்லை. அப்படத்தின் மீதிருந்த பொருளாதார நெருக்கடி அனைத்தும் சரி செய்யப்பட்டு மார்ச் 1-ம் தேதி மதியக் காட்சியில் இருந்துதான் வெளியானது. இதனால் இப்படத்துக்கு எதிர்பார்த்த திரையரங்குகள், வசூல் என கிடைக்கவில்லை. மேலும், இந்த தாமதம் படக்குழுவினரை பெரும் சிக்கலுக்கும் ஆளாக்கியது.

தற்போது ‘சப்தம்’ படம் குறித்து இயக்குநர் அறிவழகன், “‘சப்தம்’ படத்தினை தாமதமாக வெளியிட்டு, விளம்பரமின்றி கொன்றார்கள். ஆனால் ரசிகர்கள் அப்படத்தினை கொல்லவில்லை. திரையரங்குகளுக்கு வந்து படம் பார்த்து, தொலைபேசி மூலமாக அனைவரும் பேசி ‘சப்தம்’ படத்துக்கு அன்பை பொழிந்த அனைவருக்கும் நன்றி. அந்த அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அறிவழகன் இயக்கத்தில் ஆதி, லட்சுமி மேனன், ராஜீவ் மேனன், லைலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சப்தம்’. தமன் இசையமைப்பில் வெளியான இப்படம் முழுக்க சத்தத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட ஹாரர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

When they kills the movie through delay in release and zero promotions , audience didn’t kill #Sabdham. Thank you audience for the genuine love and support through shows full and also through calls from all sides. Thanks once again with unconditional love pic.twitter.com/wUFTQygzii

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in