அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் ‘பாம்’!

அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் ‘பாம்’!
Updated on
1 min read

வில்லனாக நடித்து வந்த நடிகர் அர்ஜுன் தாஸ், இப்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அநீதி, ரசவாதி படங்களில் ஹீரோவாக நடித்துள்ள அவர் மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ‘பாம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

காளி வெங்கட், ஷிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, சிங்கம் புலி, பால சரவணன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். இமான் இசை அமைத்துள்ளார். மகிழ்நன் வசனம் எழுதியுள்ளார். பி.எம்.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in