‘தக் லைஃப்’ படத்துக்கான டப்பிங்கை தொடங்கினார் கமல்ஹாசன்!

‘தக் லைஃப்’ படத்துக்கான டப்பிங்கை தொடங்கினார் கமல்ஹாசன்!
Updated on
1 min read

சென்னை: ‘தக் லைஃப்’ படத்துக்கான டப்பிங் பணிகளை கமல்ஹாசன் தொடங்கியள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதில் கமலின் மகனாக சிலம்பரன் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இந்தி நடிகர் அலி ஃபஸல், த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், அபிராமி உட்பட பலர் நடிக்கின்றனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இதன் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. அண்மையில் சிம்பு இந்தப் படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கினார்.

இந்த நிலையில் இப்படத்துக்கான டப்பிங் பணிகளை கமல்ஹாசனும் தொடங்கியள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதற்காக வீடியோ ஒன்றையும் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in