SK 23 | சிவகார்த்திகேயனுக்கு வில்லன் ஆனார் வித்யுத்

SK 23 | சிவகார்த்திகேயனுக்கு வில்லன் ஆனார் வித்யுத்
Updated on
1 min read

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் படத்தை ஸ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சிவகார்த்திகேயனின் 23-வது படமான இதில் கன்னட நடிகை ருக்மணி வசந்த் நாயகியாக நடித்து வருகிறார். மலையாள நடிகர் பிஜு மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இதில் வில்லனாக இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால் நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் படக்குழு அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’யில் வில்லனாக நடித்திருந்தார். சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்தில் அவர் நண்பனாகவும் நடித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in