Last Updated : 02 Apr, 2018 12:50 PM

 

Published : 02 Apr 2018 12:50 PM
Last Updated : 02 Apr 2018 12:50 PM

விஜய் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஜீ.வி.பிரகாஷ்

விஜய் இயக்க இருக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஜீ.வி.பிரகாஷ்.

விஜய் இயக்கத்தில் ‘கரு’ மற்றும் ‘லக்‌ஷ்மி’ என இரண்டு படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. ‘கரு’ படத்தில் சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் இந்தப் படத்தில், ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

‘லக்‌ஷ்மி’ படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடித்திருக்கிறார். நடனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டு படங்களுக்குமே சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து விஜய் இயக்க இருக்கும் புதிய படத்தில் ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். விஜய் இயக்கத்தில் வெளியான ‘கிரீடம்’, ‘மதராசப்பட்டினம்’, ‘தெய்வத் திருமகள்’, ‘தாண்டவம்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘இது என்ன மாயம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் ஜீ.வி.பிரகாஷ். இந்நிலையில், அவர் படத்திலேயே ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது ‘செம’, ‘அடங்காதே’, ‘4ஜி’, ‘குப்பத்து ராஜா’, ‘ஐங்கரன்’, ‘சர்வம் தாளமயம்’, ‘100% காதல்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x