சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘குரங்கு பெடல்’ ஃபர்ஸ்ட் லுக் டீசர் எப்படி?

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘குரங்கு பெடல்’ ஃபர்ஸ்ட் லுக் டீசர் எப்படி?

Published on

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான சிவகார்த்திகேயன் புராடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்தப் படத்துக்கு ‘குரங்கு’ பெடல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மதுபானக் கடை மற்றும் வட்டம் ஆகிய படங்களை இயக்கிய கமல்கண்ணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குழந்தைகளை மையப்படுத்திய திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த ஆண்டு கோடை விடுமுறை சமயத்தில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகள் சைக்கிள் பழகும்போது குரங்கு பெடல் போடுவதை காட்சி அமைப்புகள் காண்பிக்கின்றன. இந்த டீசர் தற்போது கவனம் பெற்று வருகிறது.

ஏற்கெனவே, நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 'கூழாங்கல்' பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியுள்ள படம, ‘கொட்டுக்காளி’. சூரி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகை அன்னாபென் நாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in