அமரன்: வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் கதை

அமரன்: வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் கதை
Updated on
1 min read

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சோனி பிக்சர்ஸ் மற்றும் ஆர்.மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் டீசரை, சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. படத்துக்கு ‘அமரன்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மற்றும் ராகுல் சிங் மற்றும் ஷிவ் அரூர் எழுதிய ‘இண்டியா’ஸ் மோஸ்ட் ஃபியர்லஸ்: ட்ரூ ஸ்டோரிஸ் ஆஃப் மாடர்ன் மிலிட்டரி’ புத்தகத்தின் அடிப்படையில் இந்தப் படம்உருவாகிறது. சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார். இதன் டைட்டில் டீசர் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in