சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த வித்யூத் ஜாம்வால்

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த வித்யூத் ஜாம்வால்
Updated on
1 min read

சென்னை: பிரபல இந்தி நடிகர் வித்யூத் ஜாம்வால். இவர், தமிழில் அஜித்தின் ‘பில்லா 2’, விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படங்களில் வில்லனாக நடித்திருந்தார். ‘அஞ்சான்’ படத்தில், சூர்யாவின் நண்பராக நடித்திருந்தார். பிறகு தமிழில் கவனம் செலுத்தாத அவர், இந்தியில் ஆக்‌ஷன் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் இதன் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in