Published : 25 Feb 2024 06:11 AM
Last Updated : 25 Feb 2024 06:11 AM

கதைக் கேட்க மறுத்த ஹீரோக்கள்: ‘டபுள் டக்கர்’ இயக்குநர் வருத்தம்

சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்துள்ள ஃபேன்டசி ஆக் ஷன் படம் ‘டபுள் டக்கர்'. மீரா மஹதி இயக்கியுள்ள இந்தப் படத்தை ஏர் ஃபிளிக் நிறுவனம் தயாரித்துள்ளது. வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

படத்தின் இயக்குநர் மீரா மஹதி கூறியதாவது: யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாமல் குறும்படங்கள் இயக்கிய அனுபவத்தில் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறேன். வளர்ந்துவரும் நாயகர்கள் சிலரிடம் கதை சொல்ல முயன்றேன். அவர்கள் யாரும் குறைந்தபட்சமரியாதையைக் கூட கொடுக்கவில்லை. 5 நிமிடம் மட்டும் கொடுங்கள் என்றேன்.யாரும்கொடுக்க முன்வரவில்லை. பிறகு மைம் கோபி சார் தான் தீரஜிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் 5 நிமிடத்தில் என்னை இம்ப்ரஸ் செய்ய முடியுமா? என்று கேட்டார். கதை சொல்லத் துவங்கினேன். முடிக்கும் போது ஒரு மணி நேரம் ஆகியிருந்தது. ஆரம்பிக்கும் போது சிறிய படமாகத்தான் இருந்தது. படத்தில், வரும் அனிமேஷன் பகுதிகளை ஏற்கெனவே மனதில் டிசைன் செய்து வைத்திருந்தேன். பிறகு தீரஜ் சார், இது சூப்பராக ஒர்க்-அவுட் ஆகும், கண்டிப்பாக பெரிய அளவில் செய்வோம் என்று கூறி படத்தின் பட்ஜெட்டை எட்டு மடங்காக உயர்த்திவிட்டார். இவ்வாறு மீரா மஹதி கூறினார்.

மிஷ்கின், நடிகர் தீரஜ், இணை தயாரிப்பாளர் சந்துரு மற்றும் படக்குழுவினர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x