Published : 13 Sep 2023 05:55 AM
Last Updated : 13 Sep 2023 05:55 AM

‘குற்றப்பரம்பரை’யில் நான் இல்லை: சமுத்திரக்கனி

தமிழ், தெலுங்கில் பிசியான நடிகராக இருக்கிறார் சமுத்திரக்கனி. தெலுங்கில் அவர் இயக்கிய ‘புரோ’ வரவேற்பைப் பெற்றதை அடுத்து அங்கு படம் இயக்கவும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. சமீபத்தில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் பேசினோம்.

“இப்போ ‘ஆர் யூ ஓகே பேபி’ படத்தில் நடிச்சிருக்கேன். வரும் 22-ம் தேதி இந்தப்படம் வெளியாகும். சில படங்கள்ல நடிக்கும்போது மனசுக்கு நெருக்கமா உணர முடியும். அப்படியொரு படம் இது. லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி இருக்காங்க. அபிராமி எனக்கு ஜோடி. தொடர்ந்து சில படங்கள்ல நடிச்சிட்டு இருக்கேன். வித்தியாசமான வேடங்கள்ல நடிக்கிறது ரொம்ப பிடிச்சிருக்கு.

தெலுங்கு மொழி கத்துக்கிட்டீங்கன்னு பவன் கல்யாண் உங்களை பாராட்டியிருக்காரே?

பேசமட்டுமல்ல, எழுதவும் வாசிக்கவுமே கத்துக்கிட்டேன். சில வருஷங்களா தெலுங்குல நடிச்சுட்டு வர்றேன். நிறைய வாய்ப்புகள் வருது. அதனால அந்த மொழிய கத்துக்காம இருக்க முடியாது. முதல்ல பேசக் கத்துக்கிட்டேன். பிறகு நான் இயக்கிய ‘விநோதய சித்தம்’ படத்தை தெலுங்குல ரீமேக் பண்ணணும்னு நினைச்சதும் கொஞ்சமாவது எழுதி வாசிக்கத் தெரியணும்னு முடிவு பண்ணினேன். அதனால அதுக்கு ஒருத்தரை ஏற்பாடு பண்ணி, கத்துக்கிட்டேன். அந்தப் பட ஷூட்டிங்ல நான் தெலுங்குல எழுதி வாசிச்சதைப் பார்த்தும் பவன் கல்யாண் சாருக்கு ஆச்சரியம். எப்படி?ன்னு கேட்டார். சொன்னேன். அந்தப் படத்தோட புரமோஷன் நிகழ்ச்சியில, அதை அவர் பாராட்டினார். இதைப் போல நானும் தமிழ்க் கத்துக்கிட்டு திருக்குறள் சொல்வேன்னு சொன்னார்.

தமிழை விட தெலுங்குலதான் அதிகமா நடிச்சுட்டு வர்றீங்க..?

அப்படி சொல்ல முடியாது. ரெண்டு மொழியிலயும் நடிச்சுட்டு இருக்கேன். எங்க வாய்ப்பு கிடைக்குதோ அங்க நடிக்க வேண்டியதுதான். தெலுங்கு சினிமாவுல, அவங்க ‘அப்ரோச்’ நல்லாயிருக்கு. காலைல 7 மணிக்கு ஷூட்டிங்னா, முந்தைய நாள் 6 மணிக்கு போன் பண்ணி, “சார், சரியா பத்து மணிக்கு தூங்கிருங்க, அப்பதான் காலைல பிரஷ்ஷா இருப்பீங்க”னு சொல்வாங்க. படங்களுக்கும் படப்பிடிப்புக்கும் அவங்க கொடுக்கிற அக்கறை, முக்கியத்துவம் ரொம்ப நல்லாயிருக்கு.

சிரஞ்சீவியை இயக்கப் போறீங்க, பிரபாஸ் படத்துல நடிக்கிறீங்கன்னு நிறைய தகவல்கள் வருதே?

நான் இயக்கிய ‘புரோ’ படத்தைப் பார்த்துட்டு சிரஞ்சீவி சார் பாராட்டினார். எங்க குடும்பத்துல இருக்கிற எல்லா ஹீரோவையும் இயக்குங்கன்னு சொன்னார். அவரை இயக்க பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு. அவர் பிசியான நடிகர். எல்லாம் ஓகேவானா மகிழ்ச்சிதான். மாருதி இயக்கத்துல பிரபாஸ் நடிக்கிற ‘ஸ்பிரிட்’ படத்துல முக்கியமான வேடத்துல நடிக்கிறேன்.

சசிகுமார் உங்க நண்பர், அவர் இயக்கும் ‘குற்றப்பரம்பரை’யில நடிக்கிறீங்களா?

இல்லை. அவர் ஷூட்டிங் தொடங்கும்போது நான் வேறுபடங்கள்ல பிசியா இருக்கிறேன். முதல்ல நடிக்கிறேன்னு ஓகே சொல்லிட்டு, பிறகு கால்ஷீட் சிக்கல் வந்துடக் கூடாது இல்லையா? அதனால அதுல நடிக்கலை.

அடுத்து தமிழ்ல எப்ப படம் இயக்கப் போறீங்க?

விரைவில் அறிவிப்பு வரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x