அரசியல் கதையில் இணைந்து நடிக்கும் செல்வராகவன் - யோகிபாபு

அரசியல் கதையில் இணைந்து நடிக்கும் செல்வராகவன் - யோகிபாபு

Published on

சென்னை: தமிழக அரசியலை மையமாகக் கொண்டு உருவாகும் ஒரு புதிய படத்தில் செல்வராகவன் - யோகிபாபு இணைந்து நடிக்கின்றனர்.

தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் சமீபகாலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ‘பீஸ்ட்’, ’பகாசூரன்’, ‘சாணிக் காயிதம்’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அந்த வரிசையில் தமிழக அரசியலை மையமாகக் கொண்டு உருவாகும் ஒரு புதிய படத்தில் செல்வராகவன் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, ராதாரவி மற்றும் வினோதினி உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். இயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

தற்போது திண்டுக்கல், ராமநாதபுரம், கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்று படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in