ஆஸ்கர் குழுவில் மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் வரவேற்பு
ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராவதற்கு ஒவ்வொரு வருடமும் பல்வேறுநாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவது வழக்கம். 2023-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளைத் தேர்வு செய்யும் குழுவுக்கு மொத்தம் 398 பேர் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து ஏற்கெனவே சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வுக்குழு உறுப்பினராக உள்ள நிலையில், இப்போது இயக்குனர் மணிரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னத்தை இந்தக் குழுவுக்கு வரவேற்றுள்ளார். ‘ஆஸ்கர் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள். இந்தக் குழுவுக்கு உங்களை வரவேற்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
