அட்லீ - அல்லு அர்ஜுன் பட டைட்டில் வெளி​யீடு எப்போது?

அட்லீ - அல்லு அர்ஜுன் பட டைட்டில் வெளி​யீடு எப்போது?
Updated on
1 min read

‘புஷ்பா 2’ படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் ஹீரோ​வாக நடிக்​கும் படத்தை அட்லீ இயக்​கு​கிறார். சன் பிக்​சர்ஸ் தயாரிக்​கும் இந்த சயின்ஸ் பிக் ஷன் படத்​தில் தீபிகா படுகோன் நாயகி​யாக நடிக்கிறார். ராஷ்மிகா மந்​தனா உள்பட மேலும் சில நாயகி​கள் நடிக்​கின்​றனர்.

மெகா பட்​ஜெட்​டில் உரு​வாகும் இப்​படத்​தின் டைட்​டில் டீஸர், அல்லு அர்​ஜுனின் பிறந்த நாளை முன்​னிட்டு ஏப்​.8-ம் தேதி வெளி​யாக இருக்​கிறது. அந்த டீஸர், பிரமிக்க வைக்​கும் வகை​யிலும் அல்லு அர்​ஜுனின் கதா​பாத்​திரத்தை அறி​முகப்​படுத்​தும் வித​மாக​வும் இருக்​கும் என்றும் கூறப்​படு​கிறது.

“அல்லு அர்​ஜுனை இதற்கு முன் பார்த்​தி​ராத அவதா​ரங்​களில் இப்​படம் காண்​பிக்க இருக்​கிறது. அவர் ஒரு குடும்​பத்​தின் பல தலை​முறை​களை உள்​ளடக்​கிய 4 வெவ்​வேறு வேடங்​களில் வரு​வார்.

இதன் விஎஃப்​எக்ஸ் காட்​சிகள், ஹாலிவுட் படங்​களுக்கு பணி​யாற்​றிய ஸ்டூடியோக்​களில் நடை​பெற இருக்​கிறது. தற்​போது மும்​பை​யில் நடை​பெற்று வரும் இதன் படப்​பிடிப்​பு, செப்​டம்​பரில் முடிவடை​யும். அடுத்த வருடம் படம் ரிலீ​ஸாகும்” என்று படக்​குழு தெரிவித்துள்​ளது.

அட்லீ - அல்லு அர்ஜுன் பட டைட்டில் வெளி​யீடு எப்போது?
மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in