மலையாள திரை ஆளுமை சீனிவாசன் காலமானார்

மலையாள திரை ஆளுமை சீனிவாசன் காலமானார்
Updated on
1 min read

கொச்சி: மலையாள திரையுலகில் நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், பின்னணி குரல் கலைஞர், தயாரிப்பாளர் என பன்முகத் திறனுக்காக அறியப்படும் சீனிவாசன் காலமானார். அவருக்கு வயது 69.

உடல் நலக்குறைவு காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். டயாலிசிஸ் சிகிச்சைக்காக சென்ற போது அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து திருப்பூணித்துறை தாலுகா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை 8.30 மணி அளவில் அவர் உயிரிழந்தார்.

கடந்த 1956, ஏப்ரல் 6-ம் தேதி கண்ணூர் மாவட்டத்தில் அவர் பிறந்தார். மலையாள சினிமாவில் சமூக நலன் சார்ந்த நகைச்சுவைக்காக பரவலாக அறியப்படுகிறார். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலானது அவரது திரை பயணம். 225 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். காந்தி நகர் இரண்டாவது தெரு, பட்டணப்பிரவேசம், மிதுனம், கத பரயும்போல் உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார்.

திரைப்படம் எழுதி இயக்கி உள்ளார். நடிப்பு, கதை, இயக்கம் என பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். இதில் தேசிய விருதும் அடங்கும். தமிழில் ‘லேசா லேசா’ படத்தில் நடித்துள்ளார். அவர் வழியில் அவரது மகன்கள் வினீத் சீனிவாசன் (ஹ்ருதயம் பட இயக்குநர்) மற்றும் தயான் சீனிவாசன் ஆகியோரும் திரை உலகில் பயணித்து வருகின்றனர். நடிகர் சீனிவாசனின் மறைவுக்கு திரை உலகினர் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மலையாள திரை ஆளுமை சீனிவாசன் காலமானார்
தேசிய கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in