தேசிய கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி!

தேசிய கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி!
Updated on
1 min read

அனந்தபூர்: 2025-26-ம் ஆண்​டுக்​கான சந்​தோஷ் கோப்​பைக்​கான 79-வது தேசிய கால்​பந்து சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் தமிழ்​நாடு அணி தனது 2-வது ஆட்​டத்​தில் நேற்று ஆந்​தி​ரா​வுடன் விளை​யாடியது.

அனந்​த​பூரில் உள்ள ஆர்​டிடி மைதானத்​தில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் தமிழ்​நாடு அணி 5-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. தமிழ்​நாடு அணி தரப்​பில் அலெக்​சாண்​டர் ரோமாரியோ ஜெசு​ராஜ் (45 மற்​றும் 65-வது நிமிடங்​கள்) 2 கோல்​கள் அடித்​தார். தேவதத் (21-வது நிமிடம்), நந்​தகு​மார் அனந்​த​ராஜ் (35-வது நிமிடம்), சுராஜ் குமார் (82-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்​தனர். தமிழ்​நாடு அணிக்கு இது 2-வது வெற்​றி​யாக அமைந்​தது.

தமிழ்​நாடு அணி தனது முதல் ஆட்​டத்​தில் 6-0 என்ற கோல் கணக்​கில் அந்​த​மான் மற்​றும் நிக்​கோ​பார் தீவு​களை வீழ்த்​தி​யிருந்​தது. தனது அடுத்த ஆட்​டத்​தில் தமிழ்​நாடு அணி நாளை (21-ம் தேதி) புதுச்​சேரி அணி​யுடன் மோதுகிறது.

தேசிய கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி!
டேவன் கான்வே 227 ரன்கள் விளாசல்: 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது நியூஸி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in