வசூல் குவிக்கும் மலையாள ‘வாழ 2’

வசூல் குவிக்கும் மலையாள ‘வாழ 2’
Updated on
1 min read

புதுமுகங்கள் ஹாஷிர், ஆலன் பின் சிராஜ், அஜின் ஜாய், விநாயக் உள்ளிட்ட பலர் நடித்த மலையாள படம், ‘வாழ 2’. சவின் எஸ்ஏ இயக்கியுள்ளார். கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘வாழ’ படத்தின் 2ம் பாகம் இது.

காமெடி டிராமா படமான இதில், முதல் பாகத்தில் நடித்தவர்களே இதிலும் நடித்தனர். இப்படத்தின் கதையை ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’, ‘குருவாயூர் அம்பலநடயில்’ படத்தை இயக்கிய விபின் தாஸ் எழுதியுள்ளார். நண்பர்களுக்குள் நடக்கும் விஷயங்களை காமெடி எமோஷன் கலந்து சொன்ன இப்படம் ஏப்.2-ம் தேதி வெளியானது.

முதல் வாரத்திலேயே ரூ.100 கோடியை கடந்தது. இப்போது ரூ.210 கோடியைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. ரூ.200 கோடி வசூலைத் தண்டிய 5 வது மலையாளப் படம் இது. இதற்கு முன் ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ படம் ரூ.303 கோடி வசூலித்து முதலிடத்தில் இருக்கிறது.

அடுத்தடுத்த இடங்களில் ‘எல் 2: எம்புரான்’ (ரூ.266 கோடி), ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ (ரூ.241 கோடி), ‘துடரும்’ (235) ஆகிய படங்கள் உள்ளன. ‘வாழ 2’ திரைப்படம் ரூ.300 கோடி வசூலைக் கடக்கும் என்கிறார்கள்.

வசூல் குவிக்கும் மலையாள ‘வாழ 2’
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in