காதலர் தினத்​தில் வெளியாகிறது ‘சீதா பயணம்’

காதலர் தினத்​தில் வெளியாகிறது ‘சீதா பயணம்’
Updated on
1 min read

நடிகர் ‘ஆக் ஷன் கிங்’ அர்​ஜுன், ஜெய்​ஹிந்த், தாயின் மணிக்​கொடி, வேதம் உள்பட 12 படங்​களை இயக்​கி​யுள்​ளார்.

இவர் இப்​போது இயக்​கி​யுள்ள படம், ‘சீதா பயணம்’. இதில் அவர் மகள் ஐஸ்​வர்யா அர்​ஜுன் நாயகி​யாக நடித்​திருக்​கிறார். கன்னட நடிகர் உபேந்​தி​ரா​வின் உறவினர் நிரஞ்​சன் கதா​நாயக​னாக நடித்துள்​ளார். சத்​ய​ராஜ், பிர​காஷ் ராஜ் முக்​கிய வேடங்​களில் நடித்துள்​ளனர்.

தமிழ், தெலுங்​கு, கன்னட மொழிகளில் உரு​வாகி​யுள்ள இந்​தப் படத்தை அர்​ஜுனின் ஸ்ரீராம் பிலிம்ஸ் தயாரித்​துள்​ளது. இந்நிலையில் இப்​படத்​தின் டிரெய்​லர் நேற்று வெளி​யாகி​யுள்​ளது. காதல் கதையை கொண்ட இப்​படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்​.14-ல் ரிலீஸ் ஆகிறது.

காதலர் தினத்​தில் வெளியாகிறது ‘சீதா பயணம்’
Dear Men: இருண்ட உலகமும், சயானி போன்ற மீட்பர்களும்! - திரை தேவதைகள் 04

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in